ஏடு அமைப்பிற்கு வரவேற்கின்றோம்

ஏடு- இலங்கை இனது அறக்கொடை (charitable) பணி தொடர்பில் தாங்கள் காட்டும் ஈடுபாட்டுக்காகவும் எமது இணையத்தளத்திற்கு வருகை தந்ததற்காகவும் தங்களுக்கு எமது நன்றிகள் உரித்தாகட்டும்.

ஏடு- இலங்கை ஆனது வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள வசதி குறைந்த சிறுவர்களது வாழ்வை மேம்படுத்துவது தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் ஒரு தொண்டர் அமைப்பாகும்..

2004 இல் ஏற்பட்ட சுனாமிப் பேரழிவைத் தொடர்ந்து, ஏடு-சர்வதேசம்
ஆனது சுனாமி மற்றும் போரினால் அநாதரவானவர்களுக்கு ஆதரவு நல்கும் நோக்குடன் தாபரிப்புப் பெற்றோர் முறை (Foster Care) நிகழ்ச்சித் திட்டங்களைச் செயற்படுத்தி தமதுசெயற்பாடுகளின் எல்லைகளை விஸ்தரித்தது.

தாபரிப்புப் பெற்றோர் முறை நிகழ்ச்சித் திட்டமானது சமூகத்தில் பெற்றோரை அல்லது பிரதான உழைப்பாளரை இழந்த சிறார்களை சமூகத்தில் பேணி வளர்க்கும் நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இந்த தாபரிப்புப் பெற்றோர்முறை நிகழ்ச்சித் திட்டமானது அநாவசியமாகப் பிள்ளைகளை சிறுவர் இல்லங்களுக்கு அனுப்பப்படுவதைத் தவிர்த்து அவர்களைச் சமூகத்திலேயே வைத்து தாயாரோலோ அல்லது உறவினராலோ பேணப்படுவதை ஊக்குவிக்கின்றது.

இந் நிகழ்ச்சித் திட்டமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் 2004 முதல் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. தொடர்ந்து 2008 இல் திருகோணமலை மாவட்டத்திலும் ஏடு Foster Care நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 2013 இல் அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது

ஏடு அமைப்பு ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்துவமாக மாவட்டத்தின் எல்லைக்குள் இயங்குவதற்கு தொண்டர் ஸ்தாபனமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் தனித்துவமான அமைப்புகளாகவும் அந்த மாவட்டத்திற்குள் இயங்கி வருகின்றது.{ ஏடு- இலங்கை (திருகோணமலை மாவட்டம், ஏடு- இலங்கை (மட்டக்களப்பு மாவட்டம், ஏடு- இலங்கை (அம்பாறை  மாவட்டம)}


இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் இரு தசாபதங்களாகப் போரால் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான சிறார்கள் அநாதைகளாகியுள்ளனர். 25 வருட வன்முறைகள் இப் பிரதேச மக்களில் பெரும்பாண்மையானவர்களை வெகுவாகப் பாதித்துள்ளது.98,000 விதவைகள் இந்தப் பிரதேசேத்திலுள்ளனர்.

மேலும் சுனாமியானது 30,000 உயிர்களை காவு கொண்டுள்ளது. லட்சக்கணக்கான உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் சிதைத்துள்ளது. நூறாயிரக் கணக்கான மக்கள் இடம்பெயர்க்கப்பட்டனர். இவர்களில் பலர் வீடுகளை இழந்தனர். இக்காரணங்கள் சமூகத்தில் அநாதைகள் தொகையில் சடுதியான அதிகரிப்பை உண்டு பண்ணியது.

மீள மீள இட ம்பெற்ற இடம்பெயர்வுகள்,மீள மீள உருவான அகதிநிலை பல பாதுகாப்பற்ற,ஏலவே வசதிகுறைந்த சிறார் தமது பாடசாலைக் கல்வியை இழக்கக் காரணமாகியது. ஒவ்வொரு வருடமும் பல ஆயிரக்கணக்கான சிறார் பாடசாலைகளிலிருந்து விலகுகின்றனர்.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் ஏராளமான அநாதை இல்லங்கள் உள்ளன. அவை எப்போதுமே அதிகரித்து வருகின்றன. சுனாமிக்கு முன்னர் பெற்றோரை இழந்த சிறார்கள் இந்த இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வந்தார்கள். பெற்றோரின் வறுமை காரணமாக பெற்றோர் உள்ள சிறார்கள்(பிள்ளைகள்) கூட சிறுவர் இல்லங்களில் பராமரிக்கப்பட்டனர்..

சுனாமி வரையில் அநாதை இல்லங்களே இச் சிறுவர்களுக்கான சரணாலயமாக இருந்தன.

போர், இயற்கை அழிவுகள் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் தாக்கம் என்பன வருடந்தோறும் ஆயிரக்கணக்கான சிறார்களை பாடசாலையை விட்டு விலகும்படி கட்டாயப்படுத்தியுள்ளது.

உலகத்தின் கவனம் வேறுதிசைகளில் பயணித்த பின்னரும் கூட, சுனாமி,மற்றம் போரால் பாதிப்பிற்குட்பட்ட சிறார்களும் குடும்பங்களும் இன்னமும் மீட்சி பெற நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது

ஏடு ஆனது இவ்வாறான வசதி குறைந்த பிள்ளைகளுக்கு சரியான கல்வி மற்றும் ஆரோக்கியமான வாழ்வை Foster Card programme இனை செயற்படுத்துவதன மூலம் அவர்கள் தமது சமூகத்தினுள்ளே வாழ்ந்து கொண்டே கல்வியைப் பெற்றுக் கொள்ள உதவுவதை நோக்காகக் கொண்டுள்ளது.

நீங்கள் செய்கின்ற நிதி உதவியானது இந்தச் சிறார் தமது உறவினர் அல்லது தாயுடன் உடல் மற்றும் உள வளத்துடன் வாழ உதவும்.

பாதிக்கப்பட்டு பாதுகாப்பற்ற இளம் உயிர்களது வாழ்வில் நம்பிக்கையைக் கொண்டு வர ”ஏடு” உடன் உங்களது கரங்களையும் இணையுங்கள்.


 Copyright © 2011 aedu-international.org. All Rights Reserved.