Sponsor a Child

Search for a Child

எமது பணி

பிரச்சனைகள்
  • அதிகரித்துவரும் அநாதைகள், பின்தங்கிய சிறார்களின் எண்ணிக்கை: : போர் மற்றும் வேறுகாரணங்களால் அநாதைகளினதும் பின்தங்கிய சிறாரினதும் எண்ணிக்கை விரைந்து அதிகரிக்கின்றது.
  • பாடசாலையிலிருந்து இடை விலகுவோர் : பல்வேறு காரணங்கள் நிமித்தம் பாடசாலை விலகுவோரின் அதிகரித்த தொகை.
  • சிறாரை நிறுவனமயப்படுத்தல்: சிறார் தமக்கு பரிச்சயமான சூழல் மற்றும் அவர்களுடைய சமூகம் என்பவற்றிலிருந்து அகற்றப்பட்டு, அநாதை இல்லங்களில் விடப்பட்டு, அநாதைகள் என முத்திரை குத்தபட்டு வருகின்றனர்.
  • சிறாரின் தனிமைப்பட்டு போகும் தன்மை: சிறுவர்கள் தமது பெற்றோர் அல்லது உறவுகளிடமிருந்து தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டு அநாதை இல்லங்களில் விடப்பட்டு,வருகின்றனர்..
  • சிறுவர் துஸ்பிரயோகமும் சிறுவர் தொழிலாளர்களும்:  பாலியல் சுரண்டல், சட்ட விரோத தத்தெடுப்பு, மற்றும் சிறாரைத் தொழிலில் ஈடுபடுத்தல் போன்ற எல்லா வகையான சிறுவர் துஸ்பிரயோகங்கட்கும் பல பிள்ளைகள் உள்ளாகின்றனர்.
  • Psychological deprivation: Many children undergo psychological deprivation due to isolation and all forms of child abuse including child labour and the consequences of the conflict.
  • பாடசாலைக் கல்வியில் பின்தங்கிய நிலமை: Lack or poor progress in studies due to loss of parents or breadwinner of the family, financial constrain, repeated displacements and volatile situation due to the conflict.
  • Nutritional deprivation: Many children are nutritionally deprived due to repeated displacements, consequences to the conflict and poverty.
  • பாடசாலைக் கல்விக்கு மீண்டும் மீண்டும் ஏற்படும் தடங்கல்: போரின் விளைவால் மீள மீள இடம்பெற்ற இடப்பெயர்வுகள் காரணமாக பாடசாலைக் கல்வி தடங்கலுக்குள்ளாகிறது.
  • பல்கலைக்கழகத்திலிருந்து இடைவிலகல்: போர் மற்றும் வறுமையால் பெற்றோரின் அல்லது பிரதான உழைப்பாளரின் உயிரழப்பு காரணமாக பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து விலகுகின்றனர்.

எமது பணி

  • அநாதைகளுக்கும் வாய்ப்பிழந்த பிள்ளைகளுக்கும் சூழலில் வாழவும் கல்வியைத் தொடரவும் தேவையான இயல்பான சூழல் மற்றும் சூழ்நிலைகளை வழங்குவதை ஊக்குவித்தல்: அநாதைகளுக்கும் வாய்ப்பிழந்த பிள்ளைகளுக்கும் சூழலில் வாழவும் கல்வியைத் தொடரவும் தேவையான இயல்பான சூழல் மற்றும் சூழ்நிலைகளை வழங்குவதை ஊக்குவித்தல் : இவர்கள் இயல்பான வாழ்வை வாழவும் தமது கல்வியைத் தொடரவும் தேவையான உதவிகளை வழங்க நாங்கள் உறுதி பூண்டுள்ளம். அநாதைப் பிள்ளைகளுக்கான பொருத்தமான பாதுகாவலரைக் கண்டுபிடித்து அந்த உறவுகளும் இப் பிள்ளைகள் அவர்களது சமூகத்திலேயே இந்தப் பிள்ளைகள் வாழ நாங்கள் நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் தி்ணைக்களத்துடன் சேர்ந்து பணிபுரிகின்றோம்.  பெற்றோருடன் வாழ்கின்ற வாய்ப்பிழந்த பிள்ளைகள் தமது கல்வியைத் தொடர நாம் தேவையான உதவிகளைத் தொடர்கின்றோம்.
  • பாடசாலைப் பிள்ளைகள் தமது கல்வியைத் தொடர ஆதரவளித்தல் : பிரதானமாக நிதி நெருக்கடி காரணமாக தமது கல்வியைத் தொடர முடியாத பல சிறார்கள் இருக்கின்றனர். பாடசாலைக் கல்வியைத் தொடரும் வசதி குறைந்த பிள்ளைகளுக்கு இருக்கி்ன்ற நிதி நெருக்கடி உள்ளிட்ட தடைகளை அகற்றுவதை நாம் நோக்காகக் கொண்டுள்ளோம்.
  • தாபரிப்புப் பெற்றோர் முறையை ஊக்குவித்தல்:

    சிறாரின் அநாவசிய நிறுவனமயப்படுத்தலைக் குறைப்பதை அல்லது நிறுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளோம். உணவூட்டுவதற்கும் தேவைகளக் கவனிப்பதற்கும் தேவையான மேலதிக பணச்சுமையை உறவினர்கள் எதிர்கொள்வதன் காரணமாக பெற்றாரை இழந்த சிறார் நிறுவனமயப்படுத்தப்படுகின்றனர். நிதிரீதியாக ஆதரவு நல்குவதன்மூலம் அவர்களது உறவூகள், நண்பர்களோடு சேர்ந்து வாழ்கின்ற வகையில் அவர்களது சமூகத்துடனேயே தொடர்ந்து பேணுவதற்கும் உறவினர் அல்லது நண்பர்களை தத்தெடுப்புப்பதற்கும் நாங்கள் முயற்சிக்கிறோம். தத்தெடுப்புப்பவர்களது சிறார் தமது உறவுகள், சகோதரர்கள் மற்றும் நண்பர்களுடன் கூடிய பரிச்சயமான சமூகத்துடன் வாழ வாய்ப்பளிக்கிறது. ஏந்த ஒரு பிள்ளையும் அநாதை இல்லங்களில் சேர்க்கப்படும் நிலைகளில் கடைசித் தெரிவாகவே நாம் நோக்குகின்றோம். உறவுகள் தயாரில்லாத நிலை பிள்ளைகளால், பெற்றோரால் சிறார் சுரண்டப்படும் நிலை, போன்ற சந்தர்ப்பங்களிலேயே பிள்ளைகள் இல்லங்களில் சேர்க்கப்படுவர்

  • பெற்றோர் உள்ள பிள்ளைகளை நிறுவனமயப்படுத்தலை நிறுத்துதல்: வறுமை காரணமாக இரு பெற்றோரும் உள்ள நிலையிலோ அல்லது ஒருபெற்றோர் உள்ள நிலையிலோ சிறார் இல்லங்களில் சேர்க்கப்படுகின்றனர். இந்நிலையில் இக்குடும்பங்களுக்கு நிதி வழங்குவதன் மூலமும் தொழில் பெற்றுக் கொடுத்தல் முதலான பிற ஆதரவுகளை வழங்குவதன் மூலமும் குடும்பச் சூழலிலேயே இப்பிள்ளைகளை வளர்க்க ஊக்குவிக்கின்றோம்.
  • பாடசாலை இடைவிலகலைத் தடுத்தல்: பாடசாலை விலகலைத் தோற்றுவிக்கும் தடைகளைக் கண்டுபிடிதது அகற்றுவதன் மூலம் அவர்கள் தமது கல்வியைத் தொடர ஆதரவளித்தல்.
  • இச்சிறாரின் போசாக்கு மற்றும் உடலியல் நலனை மேம்படுத்தல்: போரினாலும் அகதிநிலைகளாலும் பெற்றார் இழப்பினாலும் சிறார் போசாக்கு மற்றும் உளவியல் ரீதியில் பாதிக்கப்படுகின்றனர். இப்பிள்ளைகளின் போசாக்கு மற்றும் உளவியல் நலனை மேம்படுத்தும் வகையில் பிற ஏஜென்சிகள், மற்றும் திணைக்களங்களுடன் சேர்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.
  • சிறுவர் உழைப்பு, சட்டவிரோத தத்தெடுப்பு மற்றும் எல்லா வகையான சிறுவர் துஷ்பிரயோகங்களையும் தடுத்தல்: இந்த இலக்கை அடையூம் வகையில் நாம் சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்களத்தின் அதிகாரிகளுடன் சேர்ந்து பணிபரிகிறோம்.
  • வாழ்விழந்த மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வலுவூட்டல் : வருமானம் ஈட்டும் செயற்திட்டங்களில் இவர்களை வலுவூட்டும் வகையில் நாம் தேவையான உதவிகளையூம்; தேவையான ஆலோசனைகளையூம் வழங்குவோம். .
  • தூரப்பிரதேசங்களில், பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள வசதிகுறைந்த பாடசாலைகட்கு ஆதரவளித்தல்: தூர மற்றும் பின்தங்கிய கிராமங்களிலுள்ள பல பாடசாலைகள் புறக்கணிக்கப்பட்ட நிலையிலும் குறைந்த வசதியோடும் காணப்படுகின்றன. இவற்றுக்கு சரியான நூலகவசதிகள் மற்றும் சிறந்த கல்விக்கு தேவையான உபகரணங்களையும் வழங்க எண்ணியுள்ளோம்.
  • பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவளித்தல் : பிரதான உழைப்பாளிகளின் திடீர் உயிரழப்பு காரணமாக அல்லது குடும்பத்தின் கடுமையான நிதி நெருக்கடி காரணமாகப் பல பல்கலைக்கழக மாணவர்கள்  தமது கல்வியை இடைநிறுத்தியூள்ளார்கள். அவர்களை இனங்கண்டுஇ அவர்களது கல்வி முடிகிறவரையில் நிதிரீதியாக ஆதரவை அவர்கட்கு வழங்குவோம்.
  • தொழிற்கல்வியையும் தொழிற்பயிற்சியயையும் வழங்குதல் : தமது பாடசாலைக்கல்வியைத் தொடர முடியாதுள்ளோருக்கு தொழிற்கல்வியயையும் பயிற்சிகளையும் வழங்குவதில் நாம் உதவுவோம்.

 Copyright © 2011 aedu-international.org. All Rights Reserved.