தாபரிப்பு ( Foster Care)
போர், இயற்கை அழிவுகள், நோய்கள் மற்றும் மதுபான பாவனை போன்றன பிள்ளைகளைப் பெற்றோர் இல்லாதோராக அல்லது பெற்றோரிடமிருந்து பிள்ளைகளைப் பிரித்து வைக்கும் பிரதான காரணங்களில் சிலவாகும். உறவினர்களிடமும் சமூகத்திடமும் பிள்ளைகளைப் பராமரிக்கும் பொறுப்பைக் கையளிக்கத் துண்டும் சில காரணங்கள் இவையாகும்.

போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அநாதைப் பிள்ளைகளின் தொகையில் ஏற்பட்ட சடுதியான அதிகரிப்பானது அவர்களை அநாதை இல்லங்களில் விடவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியது. அது ஆயிரக் கணக்கான அநாதை இல்லங்கள் உருவாக்கப்படும் நிலையை உருவாக்கியது. அநாதை இல்லங்களிலுள்ள பிள்ளைகள் தமது சுற்றாடல், நண்பர்கள், உறவினர்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போகின்றனர். இந்த நிறுவனமயப்படுத்தப்பட்ட பிள்ளைகளின் உளவியல் மற்றும் உடலியல் ரீதியான விருத்தி தடுமாற்றத்திற்குள்ளாவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. இதன் காரணமாக கால வட்டத்தில் இவர்கள் எதிர்நோக்கும் இவர்களில் தோற்றுவிக்கப்படும் பிரச்சனைகளால் இவ் அநாதை இல்லங்கள் மெதுமெதுவாக மூடிவிடும் நிலையை உண்டுபண்ணியது. .

அநாதைப் பிள்ளைகளை அவர்களது சமூகத்திலேயே பேணுதலானது பேரன்மார், பேர்த்திமார் மற்றும் நெருங்கிய உறவுகளால் ஒரு தடவையாவது அக்கறையோடு பேணவைக்கும். எங்கள் பண்பாட்டில் இது சாதாரண விடயம். எனவே தாபரிப்பு என்பது எமக்குப் புதிய விடயமல்ல.இது பிள்ளைகள் நிறுவனமயப் படுத்தப் படுவதற்கு மாற்றீடாக அமையும். காலப்போக்கில் பல நாடுகளில் இதற்கு முக்கியத்துவம் தரப்பட்டது. ஆபிரிக்காவில் பல நாடுகளில் AIDS, போர் போன்ற காரணங்களால் தாபரிப்பு முறையானது பின்பற்றப் பட்டு வருவதோடு வெற்றிகரமான முறையாகவும் காணப்படுகிறது..

உள்நாட்டுப் போர் காரணமாக இலங்கையில் வடக் கிழக்குப் பகுதிகளானது மீள மீள பெருந்தொகையான அநாதைப் பிள்ளைகளைக் கண்டுள்ளது. இலங்கையில் தாபரிப்புப் பராமாரிப்பு முறையானது நீண்ட காலம் காணப்பட்டுள்ளது. சுனாமியின் பின்னர் இது பரவலான விதத்தில் நடைமுறைப்படடுத்தப்பட்டு வருகிறது.

சுனாமியைத் தொடர்ந்து, விசேட ஏற்பாட்டின் கீழ் 2005ம் ஆண்டு இல. 16 சுனாமிச் சட்டமானது ஜூன் 2005 இல் நடைமுறைக்கு வந்தது. இது தாபரிப்புப் பெற்றோர் முறையை ஊக்குவிப்பதோடு நிறுவனங்களில் பிள்ளைகள் இணைக்கப்படுவதை தடுக்கிறது.

சட்ட ரீதியாக ஒரு வருடத்தின் பின்னர் உறவினர் அல்லது நண்பர்களால் தாபரிப்பு முறைக்காக தத்தெடுக்கப்பட சட்டத்தில் இடமிருக்கின்றது.

சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைத் திணைக்களமும் (Department of Probation and Child Care) ஆனது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையுடன் இணைந்து பொருத்தமான தாபரிப்புப் பெற்றோரைத் தேடித் தீர்மானிப்பர். சுனாமியினைத் தொடர்ந்து சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைத் திணைக்களமும் (Department of Probation and Child Care) ஆனது யுனிசெப் (UNICEF) இன் உதவியோடு பெற்றோரை இழந்த பிள்ளைகளைப் பொருத்தமான உறவினர் அல்லது நண்பர்களிடம் ஒப்படைத்தது. இப் பாதுகாவலர்கள் வளர்ப்பதற்கான அனுமதியை நீதவான் நீதிமன்றில் ( Magistrate's Court ) பெற்றுக் கொள்ள வேண்டும். (இது குடும்பம் அல்லது நண்பர்கள்/உறவினர்கள் தாகரிப்பு வளர்ப்பாகும்).

 
 

தாபரிப்பு வளர்ப்பானது மிகவும் உன்னிப்பாகக் கண்பானிக்கப்படுகிறது. ஒரு பிள்ளையானது சரியான விதத்தில் பேணப்படாதவிடத்து சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைத் திணைக்களமானது வேறு ஒரு பொருத்தமான இடத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும். மிகவும் அவசியமான நிலையில் மட்டுமே அநாதை இல்லங்களில் ஒப்படைக்கும் நிலை வரலாம். இது தாபரிப்பு வளர்ப்பு சாத்தியமற்றுப் போகும் நிலையில் இறுதித் தெரிவாக நடைபெறலாம்.

 


மதிப்பீடு ஒன்றின்படி, அநாதை இல்லங்களிலுள்ள பிள்ளைகளில் 54% ஆனவர்கள் இரு பெற்றோர்களும் உள்ளவர்களாகவும் 26.5% ஆனோர் ஒரு பெற்றோரை உடையவர்களாகவும் காணப்படுவதாக அறியப்படுகின்றது. இவர்கள் வறுமை காரணமாக நிறுவனமயப்படுத்தப்பட்டு உள்ளனர். ஒரு பெற்றோரையுடைய அல்லது இரு பெற்றோரையுடைய இவ்வாறான சிறுவர்களுக்கு பொருளாதார உதவிகளைச் செய்வதன் மூலம் பெற்றோர் மற்றும் சகோதரர்களிடமிருந்து சிறுவர்கள் அநாவசியமாக பிரித்து வைக்கப்படுவதை தடுக்கலாம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.. வறுமைக்கான தீர்வாக அநாதை இல்லங்கள் அமையக் கூடாத.

சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைத் திணைக்களமும் (Department of Probation and Child Care), யுனிசெப் உம் இணைந்து ஒரு பெற்றோரை அல்லது இரு பெற்றோர்களையும் அல்லது நெருங்கிய உறவினரைக் கொண்ட பிள்ளைகளை தேவையான உதவிகளைச் செய்வதன் மூலம் அவர்களைச் சமூகத்துடன் மீளிணைக்கும் பணியைச் செய்கின்றது. (Reunification project ).

ஸ்திரமான வீட்டுச் சுற்றாடலானது அநாதைப் பிள்ளைகட்கு மனவடுவை விரைவில் வெற்றிகொள்ள உதவுவதோடு தமது அன்புடையோரை இழந்த தாபரிப்புப் பெற்றோருக்கும் வாழ்வில் ஒரு அர்த்தத்தைத் தரும்.


A stable home environment will not only enable the orphans to overcome the trauma of loss sooner, but also, give the foster parents who have lost their loved ones a focus in life.

தாபரிப்பு வளர்ப்பின் பிரதான விடயம் உண்ணிப்பான கவனிப்பாகும். ஏடு ஆனது இலங்கையின் வடக்கு கிழக்கில் வளர்ப்புப் பராமரிப்பின் வெற்றியை உறுதி செய்ய முயல்கிறது. 

நெல்சன் மண்டேலா தனது லண்டன் உரையில் ”...செல்வந்தர்களை ஏழைகளுக்கு உதவுமாறு ...” கூறினார்.

நாங்கள் எப்போதும் எமது சிறு பங்களிப்பின் மூலம் இந்த பாதுகாப்பற்ற, மனவடுவுக்குள்ளான பிள்ளைகட்கு உதவுவது அவர்களது வாழ்வைப் பிரகாசமாக்கி வலுப்படுத்தும்.



 Copyright © 2011 aedu-international.org. All Rights Reserved.