How We Implement/ Monitor Foster Care

இலங்கை அதிகாரிகள் தாபரிப்பு வளர்ப்பை கருத்திற் கொண்டு தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். அநாதை இல்லங்களில் சேர்ப்பதைக் கடைசித் தெரிவாகவே செய்கின்றனர்.

கிழக்கு மாகாணத்திற்கான சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவை திணைக்கள ஆணையாளர் அனுப்பிய சுற்றுநிருபம் ஒன்றில் ஏற்கனவே இருக்கும் அநாதை இல்லங்களிலே பிள்ளைகள் இனிமேல் சேர்ப்பதையும் புதிதாக அநாதை இல்லங்களையோ சிறுவர் இல்லங்களையோ அமைப்பதைத் தடுத்துள்ளார்.

தாபரிப்பு வளர்ப்பானது பல்வேறு திணைக்களங்களுடனும் அதனோடு தொடர்பான ஸ்தாபனங்களுடனும் சேர்த்து அமுல்படுத்தப்படுகிறது.

இலங்கையில் அமுல்படுத்தப்படுகின்ற தாபரிப்பு வளர்ப்பானது குடும்ப மற்றும் நண்பர்கள் / உறவுகள் தாபரிப்பு வளர்ப்பு என அழைக்கப்படுகின்றது. இங்கு பிள்ளைகள் மிகவும் பொருத்தமான கூட்டுக் குடும்ப உறுப்பினர்கள் மூலம் வளர்க்கப்படுவர். (பேர்த்தி, மாமா, மாமி மற்றும் நெருங்கிய குடும்ப அங்கத்தவர்கள்).

அநாதைப் பிள்ளைகளின் விபரங்கள் சிறுவர் நன்னடத்தை பராமரிப்புத் திணைக்களத்தினால் சேகரிக்கப்படும். பிற தொண்டர் மற்றும் சமூக ஸ்தாபனங்களும் இவர்களை அடையாளம் காண்பதில் உதவுவார்கள். கூட்டுக் குடும்பத்திலுள்ள மிகப் பொருத்தமான தாபரிப்புப் பெற்றோரை சிறுவர் நன்னடத்தை பராமரிப்புத் திணைக்களம் இனங்காணும். தாபரிப்புப் பெற்றோர் ஒருவர் இனங்காணப்பட்டவுடன் சிறுவர் நன்னடத்தை பராமரிப்புத் திணைக்கம் ஆனது நீதவானின் அனுமதிக்காக விண்ணப்பிக்கலாம். அனுமதி வழங்கப்பட்டவுடன் தாபரிப்புப் பெற்றோரிடம் பிள்ளை கையளிக்கப்பட்டு பிள்ளைக்கு இலங்கை ரூபா 500/- வழங்கப்படும்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கூட்டுக் குடும்பத்தினால் இயற்கையான பற்றுக் காரணமாக அக்கறையான கவனிப்புப் பெறுவர். வளர்ப்பதற்கான அனுமதியை சிறுவர் நன்னடத்தை பராமரிப்புத் திணைக்களத்தினூடாக கோருவார்கள்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வளர்ப்புப் பெற்றோரும் வறுமையில் உள்ளவர்களாகவே காணப்படுவர். சுனாமியாலும் போராலும் தமது வாழ்வாதாரங்களையும் வருமானம் ஈட்டும் மூலங்களையும் அவர்கள் இழந்திருப்பதால் இந்நிலை ஏற்பட்டிருக்கும். எனவே இப் பிள்ளைகளை ஆதரிப்பதற்குத் தேவையான மேலதிக உதவி இவர்களுக்குத் தேவைப்படும்.

ஏடு ஆனது இக் குடும்பங்களை இணங்கண்டு மாதாந்த நிதியுதவியை இப் பிள்ளைகட்கு வழங்குகிறது அல்லது இந்தக் குடும்பங்களுக்கென ஸ்திரமான வருமானம் ஈட்டித் தரும் திட்டங்களை உருவாக்குகின்றது. இப் பிள்ளைகளின் நலன் மற்றும் கல்வி முன்னேற்றம் தொடர்பில் கண்காணிக்கும்.

 

 

ஏடு ஆனது இத் திட்டத்தினை பிரதான உழைப்பானரை இழந்து, அல்லது பெற்றோர் உடல் ரீதியாக அல்லது மனரீதியாகப் பாதிக்கப்பட்டு அல்லது குடும்ப வருமானம் தாழ்நிலையிலுள்ள அல்லது குடும்பம் அகதி முகாம்களிலுள்ளதால் பிரதான உழைப்பாளி தொழில் செய்ய முடியாமலுள்ள பிற வறுமையில் வாடும் குடும்பங்களுக்கும் விஸ்தரித்துள்ளது.

இப் பிள்ளைகளினதும் குடும்பங்களினதும் விபரங்கள் பாடசாலைகள், ஏடு அங்கத்தவர்கள், தொண்டர்கள் மற்றும் சமூகத்திலுள்ள நலன்விரும்பிகள் ஆகியோரின் உதவியுடன் சேகரிக்கப்படும்.

இப் பிள்ளைகளினதும் குடும்பங்களினதும் விபரங்கள் கிடைத்தவுடன் ஏடு அங்கத்தவர்கள் குடும்பத்தினரிடம் விஜயம் செய்து எடுக்கப்பட்ட தரவினை உறுதி செய்து அவர்களின் வருமானத்தை மதிப்பிடுவர். அவர்களது நிதி நிலைமைக்கு அமைவாக பயனாளி பெற இருக்கும் பணத்தொகை தீர்மானிக்கப்படும். இணைந்த வங்கிக்க கணக்கொன்று பிள்ளையினதும், பெற்றோர் அல்லது தாபரிப்புப் பெற்றோரினதும் பெயரில் திறக்கப்படும். ஏடு இனது கணக்கிலிருந்து இந்தக் கணக்கிற்கு நேரடியாக நிதிமாற்றம் செய்யப்படும்.வருமானமீட்டும் செயற்திட்டமொன்றில் ஈடுபடுவதற்கு ஒரு குடும்பம் பொருத்தமானதாக அமையுமிடத்து ஏடு ஆனது இத் திட்டத்திற்கு உதவும் வகையில் நன்கொடையாளர்களிடமிருந்து உதவிகள் எதிர்பார்க்கும்.

ஏடு இன் அங்கத்தினர், பாடசாலை ஆசிரியர்கள், தொண்டர்கள், நலன்விரும்பிகள் என்போர் பிள்ளைகளின் நலன் மற்றும் கல்வி முன்னேற்றம் குறித்து சீரான கண்காணிப்பை மேற்கொள்வர். ஒரு பிள்ளை சுரண்டலுக்குள்ளாகுமெனின் அல்லது அதன் நலன் பாதிக்கப்பட்டால் மாற்றீடான பராமரிப்பு ஒன்று நாடப்படும். அதாவது புதிய தாபரிப்புப் பெற்றோரைத் தேடல், பாடசாலை விடுதியில் தங்க வைத்தல் அல்லது அநாதை இல்லமொன்றில் தங்கவைத்தல் என்றவாறு ஒரு மாற்றுத் தெரிவு சிறுவர் நன்னடத்தை பராமரிப்புத் திணைக்களத்தின் உதவியுடன் செய்யப்படும்.

தாபரிப்பு வளர்ப்பு முறை சாத்தியமற்றுப் போகும் சந்தர்ப்பத்தில் அநாதை இல்லத்தில் விடுவதே இருக்கின்ற கடைசித் தெரிவாக இருக்கும்.

ஏடு ஆனது அநாதை இல்லங்களில் பிள்ளைகளை விடுவதை புதியதொரு பொருத்தமான வளர்ப்புப் பெற்றோர் இனங்காணப்படும்வரையான தற்காலிக ஏற்பாடாகவே பார்க்கிறது. அநாதை இல்லத்தில் இருக்கும் போது ஏடு ஆனது பிள்ளைக்கான நிதியுதவியை தொடர்ந்து மேற்கொள்ளும். மேலும் அநாதை இல்லத்தின் உதவியுடன் பிள்ளையின் நலனைத் தொடர்ந்து கண்காணிக்கும்.


 Copyright © 2011 aedu-international.org. All Rights Reserved.