சிறு உதவி பெரிதளவில் வாழ்வில் மாற்றத்தை உண்டுபண்ணும்.

இரண்டு தசாப்தமாக உள்நாட்டுப்போரினதும் 2004 சுனாமி அழிவினதும் பாதிப்புக்கள் இலங்கையின் வடக்கு, கிழக்குச் சிறுவர் வாழ்வில் பாரிய கஷ்டங்களைத் தந்துள்ளது. பல பிள்ளைகள் இரண்டு பெற்றாரையூமே இழநதுள்ளளதோடு பல குடும்பங்கள் பிரதான உழைப்பாளரை இழந்துள்ளன. 

2004 சுனாமி வரை அநாதை இல்லங்களே இவர்கட்கான சரணாலயங்களாயின. சுனாமியின் பிற்பட்டகாலத்தில், UNICEF உடன் சேர்ந்து சிறுவர் நன்னடத்தை பராமரிப்புத் தி்ணைக்களம் ஆனது இப்பிள்ளைகளது உறவுகள் நண்பர்களிடமே இப்பிள்ளைகளைவிட்டு அதே சமூகத்தில் வளர்ப்பதை சிபாரிசு செய்தன.

வடக்குகிழக்கில் ஏராளமான அநாதை இல்லங்கள் காணப்படுகின்றன. இந்த இல்லங்களில் ஒன்று அல்லது இரண்டு பெற்றோரையுமே இழந்த சிறார்கள் காணப்படுகின்றனர். மேலும் பெற்றார் உயிருடன் உள்ளபோதும் ஏராளமான சிறார்கள் நிறுவனமயப்படுத்தப்பட்ட இல்லங்களில் உள்ளனர். வறுமை காரணமாக அடிப்படைத் தேவைகளை வழங்க முடியாத காரணத்தால்  இச்சிறார்கள் இல்லங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2004 சுனாமியைத் தொடர்ந்து அநாதைகளின் தொகையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டது. இலங்கையின் மொத்தப் பாதிப்பில் 60% பாதிப்பு வடக்குகிழக்கில் ஏற்பட்டது. (இலங்கை சுனாமியால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.) ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது சொத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்தார்கள். தாய் மற்றும் தந்தை இழப்பதோடு பல மாதங்கள் கல்வியையும் சிறார்கள் இழந்தனர்.


மேலும் போர் காரணமாகவும் இயற்கை அழிவுகள் காரணமாகவும் மீளமீளத் தொடர்ந்த இடப்பெயர்வுகள் மற்றும் அகதிகளைப் போன்ற நிலைமைகள் பாதுகாப்பற்ற ஏற்கனவே வசதிகுறைந்த பிள்ளைகள் தமது பாடசாலைக் கல்வியை இழக்கச் செய்தது. பல ஆயிரக்கணக்கான பிள்ளைகள் ஒவ்வொரு வருடமும் பாடசாலையைவிட்டு விலகுகின்றனர்.

அண்மைக்கால வன்முறைகள் சொல்லொண்ணா துன்பத்துக்கு ஆளாக்கியுள்ளதோடு பலரை அநாதைகளாகவும் ஆக்கியுள்ளது.

 

ஏடு- இலங்கை   இனது பிரதான இலக்குகளில் ஒன்று தாபரிப்புப் பராமரிப்பினை செயற்படுத்தலாகும். இது தனது சேவைகளை 2008 இல் திருகோணமலை மாவட்டத்துக்கு விஸ்தரித்தது. நாம் எமது சேவைகளை வடக்குகிழக்கிலுள்ள பிறமாவட்டங்களுக்கு விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்  ஆனது ஏடு- இலங்கைவடக்குகிழக்கிலுள்ள வசதிகுறைந்த பிள்ளைகளின் வாழ்வை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளது. ஏடு தாபரிப்புப் பராமரிப்பை ஊக்குவித்து நடைமுறைப்படுத்துகிறது. பிள்ளை ஒன்றினை அநாதை இல்லம் ஒன்றில் சேர்வதை அது கடைசித் தெரிவாகவே கொண்டுள்ளது. இந்நிலமை தத்துப்பராமரிப்பு சாத்தியமற்றுப் போகையிலேயே ஏற்படும்.

    ஏடு- இலங்கை இனை தனித்துவமாக்கும் உள்ளார்ந்த பண்புகள் பின்வருமாறு
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் நம்பிக்கைமிக்க மற்றும் அர்ப்பணிப்புக் கொண்ட தனிநபர்கள் கொண்ட குழுக்கள் எம்மிடம் உள்ளன. (தற்போது திருகோணமலை,அம்பாறை, மட்டக்களப்பில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் கட்டமைப்புக்கள் உள்ளன. இவை தொடர்பான  விபரங்கள் எமது வலைத்தளத்தின் மாவட்டப்பக்கத்தில் உள்ளன.) We have a group of credible and committed individuals in our committees in each district. (Currently we have functioning bodies in Batticaloa,Amparai and Trincomalee districts. Details of the members and contact details are on our website on each district page.)
  • நாம் எந்தவிதமான நிர்வாகக் கட்டணங்களையும் அறவிடவில்லை. இதனால் நீங்கள் வழங்கும் முழுப்பணமும் பிள்ளைகளைச் சென்றடையும்.
  • ஓவ்வொரு மாவட்டத்திலும் உள்ள எமது குழு பிள்ளையின் முழுமையான நலன் மற்றும் முன்னேற்றம் தொடர்பில் குறித்தகால ஓழுங்கில் சென்று பிள்ளைகளைப் பார்த்துபேசி, குறித்தகாலத்துக்கு ஒரு முன்னேற்ற அறிக்கையைத் தங்களுக்கு தரும்.
  • எங்கள அங்கத்தினர் யாவரும் தொண்டு அடிப்படையில் தான் பணி பரிகின்றனர்.
  • வெளிப்படைத்தன்மையூம் நிதியின் வினைத்திறன்மிக்க பயன்பாடும் எங்கள் கவனத்தில் எடுக்கப்படும். எங்கள் நிகழ்ச்சித்திட்டங்கள் இதற்கு அமைவாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

Please help a child and instil hope where there is despair. The needs of the children differ according to their age and educational progress.

We are committed to uplifting the lives of underprivileged children.

 

 Copyright © 2011 aedu-international.org. All Rights Reserved.