நாம் யார்?

நாம் போரினாலும், சுனாமியாலும் ஏனைய அனர்த்தங்களாலும் நலிவுற்ற பிள்ளைகளுக்கும் குடும்பங்களிற்கும் சுயமாக முன்வந்து உதவி புரியும் அமைப்பினராவோம். ஏடு-சர்வதேசம் 2004 இல் ஸ்தாபிக்கப்பட்டது.ஏடு- இலங்கை(மட்டக்களப்பு மாவட்டம்) ,ஏடு- இலங்கை (திருகோணமலை மாவட்டம),ஏடு- இலங்கை (அம்பாறை மாவட்டம்) தனித் தனியாகவும் சுதச்திரமாகவும் இயங்கும் அமைப்புக்களாகும்.

AEDU-சர்வதேச இணைப்பு அமைப்பானது பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு பல்வேறு நாடுகளிலுமுள்ள கொடையாளர்களை AEDU-இலங்கையோடு தொடர்பு படுத்தும் பணியை மேற்கொள்கிறது.

AEDU இன் முழுமையான இயல்புகளே அதனை தனித்துவமாக்குகிறது:

  • எமது ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள உறுப்பினர்கள் நம்பகத் தன்மையோடும் அர்ப்பணிப்போடும் செயற்படுபவர்களாவர். (தற்போது மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறைமாவட்டங்களிலும் எமது அமைப்பு செயற்படுகிறது. உறுப்பினர் விபரம் ஒவ்வொரு மாவட்ட பக்கங்களிலும் எமது இணையத் தளத்தில் காட்டப்பட்டுள்ளது).
  • எமது செயற்பாட்டு நிர்வாகத்திற்காக நாம் எந்த செலவையும் பெறுவதில்லை. எனவே நீங்கள் வழங்கும் நன்கொடைகள் முழுமையாக பாதிப்படைந்த பிள்ளைகள், குடும்பங்களைச் சென்றடையும்.
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் செயற்படும் எமது அங்கத்தவர்கள் நிகழ்ச்சித் திட்டங்களை வடிவமைத்து, நடைமுறைப்படுத்தி மதிப்பீடு செய்வார்கள்.
  • எமது AEDU-Sri Lanka அங்கத்தவர்கள் சிறுவர்களது முன்னேற்றத்தையும் அவர்களது நலன்களையும் தொடர்ச்சியான சந்திப்புக்கள் மூலம் கண்காணித்தலும் அவ்வப்போதான முன்னேற்ற அறிக்கைகளை வழங்குதலும்.
  • எமது அனைத்து உறுப்பினரும் சுயமாக முன்வந்து செயற்படும் தன்மையுள்ளவர்கள்.
  • வெளிப்படைத் தன்மை, மற்றும் வினைத்திறனான நிதிப் பயன்பாடு என்பவற்றை நோக்கியதாக நிகழ்ச்சித் திட்டங்களை வடிவமைத்துள்ளதுடன் அர்ப்பணிப்புடனும் செயற்படுகிறோம். அனைத்து நிதி நடவடிக்கைகளும் வங்கியின் மூலம் முறையான நிதியியல் விதிமுறைகளுடன் செயற்படுகின்றன.
  • சிறுவர்களினதும், பாதிக்பட்ட நலிவுற்ற குடும்பங்களினதும் பாதுகாப்பையும் தனித்துவத்தையும் உறுதிப்படுத்துவதற்கான பொருத்தமான சிறுவர் பாதுகாப்புக் கொள்கையையும், செயன்முறைக் கொள்கைகளையும் பின்பற்றுகிறோம்.  

© AEDU International, 2011, http://www.aedu-international.org