நாம் செய்வது

நலிவுற்ற பிள்ளைகள் மற்றும் குடும்பங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான பல செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றோம். சுனாமியின் பின் ஏடு-சர்வதேசம் தனது செயற்பாட்டை விரிவாக்கி சுனாமி மற்றும் போரினால் குடும்பத் தலைவர்களை அல்லது பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கான உதவிகளையும் மேற்கொள்கிறது. எமது வேலைத் திட்டங்கள் தாயினால் அல்லது நெருங்கிய உறவுகளால் பராமரிக்கப்படுகின்ற பிள்ளைகளை நோக்கியதாக அமைகிறது.

இப் பிள்ளைகளிற்கும் குடும்பங்களிற்கும் நிதியுதவிகளை வழங்குவதோடு பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் மற்றும் நலன்களை உறுப்பினர்கள் கண்காணிக்கின்றனர். எமது AEDU-International நிறுவனம் தாபாரிப்பு (Foster Care) நிகழ்ச்சித் திட்டத்தை பிரதான செயற்றிட்டமாகக் கொண்டாலும் நலிவுற்ற பல்கலைக் கழக மாணவர்களிற்கும் குடும்பத் தலைவரை இழந்த பிள்ளைகளிற்கு நிதியுதவி வழங்குவதையும் கவனத்திற் கொண்டுள்ளது. மேலும் பாடசாலை இடைவிலகலைக் குறைத்து ஆளுமை விருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பாடநெறிகளை வழங்குவதற்கு உதவி செய்கிறோம். அத்தோடு பாதிக்கப்பட்ட குடும்கங்களை நிலைத்து நிற்றலுக்கான வருமானத்தை ஈட்டிக் கொள்ள அவசியமான நிகழ்வுகளிற்கு உதவிகளையும் வழங்குகிறோம். மேலும், நலிவுற்ற கிராமப் பாடசாலைகளிற்கும், பாடசாலைப் பிள்ளைகளிற்கும் உதவி புரிகிறோம்.


© AEDU International, 2011, http://www.aedu-international.org