வேண்டுகோள்

அல்லலுறும் சிறார்களின் வாழ்வை மேம்படுத்த உதவுவோம்

இரண்டரை தசாப்தங்களுக்கு மேலாக தொடர்ந்த கொடூர யுத்தமும் அதன் கோர விளைவுகளும்இ 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தமும் வட கிழக்கில் உள்ள பல்லாயிரக் கணக்கான குழந்தைகளின் வாழ்வில் துயரங்களை ஏற்படுத்தியதுடன் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பெற்றோர் இருவரையும் அல்லது தாய் தந்தையரில் ஒருவரையோ இழந்து பரிதவிக்கின்றனர்.

இவ்வாறான குழந்தைகளுக்கு சுனாமி ஏற்படும் வரை அனாதை சிறுவர் இல்லங்களே புகலிடமாக இருந்து வந்தது. சுனாமிக்குப் பின்னர் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைத் திணைக்களமும் (Department of Probation and Child Care), யுனிசெப் உம் (UNICEF) குழந்தைகள் அவர்கள் வாழ்கின்ற சூழலிலேயே அவர்களின் குடும்ப உறவினர்களாலோ அல்லது குடும்ப நண்பர்களாலோ பராமரிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தன.

வட கிழக்கில் பெரும் எண்ணிக்கையான சிறுவர் இல்லங்கள் பரவிக் கிடப்பதைக் காணலாம். இந்த இல்லங்கள் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளையோ, தாயையோ அல்லது தந்தையையோ இழந்த குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுப்பதுடன் துரதிஸ்டவசமாக வறுமையின் காரணமாக பெறறோர்கள் இருந்தும் பல குழந்தைகள் இவ் அனாதை இல்லங்களில் வாழ்வதைக் காணலாம்.

சுனாமியினால் இலங்கையில் ஏற்பட்ட அழிவில் பெரும் பகுதி வட கிழக்கிலேயே ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்ததுடன் பெருமளவிலான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களையும் இழந்தனர். ஒரு நாளிலேயே ஆயிரக்கணக்காண குழந்தைகள் பெற்றோரை இழந்து அனாதரவாக்கப்பட்டனர்.

தொடர்ந்த யுத்தத்தினாலும், இயற்கை அனர்த்தத்தினாலும் அடிக்கடி ஏற்பட்ட இடம் பெயர்வானது ஏற்கனவே பின்தங்கிய சூழலிலும் வறுமைக்குள்ளும் அல்லலுற்றுக் கொண்டிருந்த மாணவர்களின் பாடசாலைக் கல்வியை அடிக்கடி இடை நிறுத்தியதுடன் பல மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பாடசாலைக் கல்வியை நிரந்தரமாக நிறுத்திடவும் செய்கிறது. மூர்க்கமடைந்த யுத்த அனர்த்தமானது பலரின் வாழ்வில் துயரை ஏற்படுத்தியதுடன் பல குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டுள்ளனர்.

ஏடு(AEDU)-International அமைப்பானது சுனாமிக்குப் பின்பு சுனாமியினாலும் யுத்தத்தினாலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் அனாதை சிறுவர் சிறுமியருக்கும் உதவ முன் வந்து அதன் செயற்பாடுகளை விஸ்தாpத்தது.

ஏடு(AEDU)-International அமைப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்றான தாபரிப்பு பெற்றோர் முறையை (Foster Care )ஊக்குவிப்பதும் நடைமுறைப் படுத்துவதுமாகும். அதாவது குழந்தைகள் தேவையற்ற முறையில் அனாதை சிறுவர் இல்லங்களில் வளராமல் அவர்கள் பழக்கப்பட்ட குடும்ப சு+ழ்நிலையிலேயே வளர்ந்து கல்வி கற்க வேண்டும் என்பதேயாகும். அத்துடன் சிறார்கள் இளவயதிலேயே பாடசாலைக் கல்வியைத் துறந்து வேலை வாய்ப்புக்காக செல்வதையும் சிறுவர் துஸ்பிரோயகத்திற்கு உள்ளாவதையும் தடுத்து நிறுத்துவதேயாகும். இத் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலும்   திருகோணமலை மாவட்டத்திலும் வெற்றிகரமாக நடைமுறைப்படு;த்தப்பட்டு வருகின்றது.


ஏடு(AEDU) அமைப்பானது வட கிழக்கில் உள்ள துயருறும் ஏழைக் குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு இயங்கி வருகின்றது. தாபரிப்பு பெற்றோர் (Foster Care) முறையை ஊக்கிவித்து நடைமுறைப்படுத்தி வருவதுடன் தாபரிப்பு பெற்றோர் முறை நடைமுறைப்படுத்த சாத்தியமில்லாத பட்சத்திலேயே ஒரு குழந்தை அனாதை சிறுவர் இல்லத்தில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே இயங்கி வருகின்றது.

 

ஏடு (AEDU)-Sri Lanka அமைப்பின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு.

•     அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் செயற்படும் அங்கத்தவர்களைக் கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் எமது அமைப்பை தனித்துவமாக செயற்படுத்தி வருகின்றோம். எமது அமைப்பின்  செயற்பாட்டாளர்களின்  விபரங்கள் எமது அமைப்பின் இணையத் தளத்தில் அம்மாவட்டங்களுக்குரிய பிரத்தியேகமான பக்கங்களில் பார்வையிடலாம்.
•     எமது அமைப்பின்  நிர்வாக செலவு அனைத்தும் உறுப்பினர்களாலேயே பொறுப்பெடுக்கப்படுகின்றது. எனவே நீங்கள் கொடுக்கும் நன்கொடை முழுவதும் பாதிப்புற்ற சிறார்களுக்கே சென்றடைகின்றது.

•     ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள எமது அமைப்பின் உறுப்பினர்கள் இக் குழந்தைகளின் நலன்களையும் முன்னேற்றங்களையும் அடிக்கடி சென்று கவனித்து அறிக்கைகளை சமர்ப்பிப்பார்கள்.
•     எங்களுடைய அமைப்பை சோ;ந்த அனைவரும் தொண்டர் அடிப்படையில் எந்த ஊதியமுமற்ற முறையிலேயே செயலாற்றுகின்றனர்.
•     எங்களுடைய திட்டங்கள் அனைத்தும் பணத்தை சாpயான முறையில் பயன்படுத்தவும் வெளிப்படையாக இருப்பதற்கான முறையிலேயே ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. அதாவது “ஏடு” வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாகவே சிறுவர்களுக்கும் பெற்றோர் பாதுகாவலர்களுக்கும் திறக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு பணம் மாற்றப்படுகின்றது.

எங்களுடைய அமைப்பின் மேலதிக விபரங்களை எங்களது இணையத்தளத்தில் பார்வையிடலாம். அல்லது எங்கள் மின்னஞ்சலான  உடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

 

ஏடு அமைப்பானது அல்லலுறும் அனாதை மற்றும் ஏழைக் குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்த உறுதிப்பாட்டுடன் செயற்பட்டு வருகின்றது.

இக் குழந்தைகளுக்கு நல்லதொரு உலகை கட்டியெழுப்ப எங்களுடன் கைகோர்த்து செயற்பட முன்வருமாறு வேண்டி நிற்கின்றௌம்.

 


© AEDU International, 2011, http://www.aedu-international.org